காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் ஆக., 21ல் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2022 04:07
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் ஸ்ரீ விநாயகர் கோயிலில் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு தெரியப்படுத்தினார். இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை 26.7.2022 மாலை கோயில் நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டத்தில் கோயில் நிர்வாக அதிகாரியும் அறங்காவலர் குழு தலைவரும் பேசுகையில் கோயில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய உள்ளதாக தெரியப்படுத்தினர். இதே போல் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கோயில் விமான கோபுரத்திற்கு சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டு 21ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாக தெரியப்படுத்தினர். இந்நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதி கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் சமயத்தில் காலை 7:00 மணி முதல் 11 மணி வரை கோயிலில் சுவாமி தரிசனம் மற்றும் கோயிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு தெரியப்படுத்தினார் . இதே போல் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்கும் சதுர் வேத ஹவன சகித மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் கோயிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தினர்.இந்த தேதிகளில் ஆர்ஜித சேவைகளில் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மற்றொரு நாட்களில் ஈடுபட மாற்றம் செய்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறித்தினர் .இந்தக் கூட்டத்தில் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் வேத பண்டிதர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.