பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
04:07
காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம் பாஞ்சாலி அம்மன் தர்ம பரிபாலன சங்க பொன்விழா மண்டபத்தில், 81ம் ஆண்டு ஆடி திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை, இன்று நடக்கிறது.பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வடக்கு மாட வீதியில், பாஞ்சாலி அம்மன் தர்ம பரிபாலன சங்க பொன்விழா மண்டபத்தில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 81ம் ஆண்டு ஆடி திருவிழா இன்று மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. இதில், திருவிளக்கு பூஜை, சந்தவெளி அம்மன், பாப்பாத்தி அம்மன், திரவுபதிஅம்மன் என, முப்பெரும் சக்திகளை புஷ்ப அலங்காரத்தில், பதி அமர்த்தி சொர்ண திருமாங்கல்யம் சாற்றி, திருவிளக்கு பூஜை நடக்கிறது.