தேவகோட்டை: தேவகோட்டை காவல் தெய்வம் கோட்டையம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா கடந்த வாரம், பூர்வீக கோவிலில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு மேடை போடப்பட்டு கோட்டை அம்மன் உருவம் அமைக்கப்பட்டது. முதல் பொங்கல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து தினமும் காலை மாலை பீடத்திற்கு அபிஷேகம் பூஜைகளை தொடர்ந்து கோட்டை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று புள்ளி பொங்கலை முன்னிட்டு கோவில் பொங்கலை தொடர்ந்து சுமார் மூவாயிரம் பேர் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர். வரும் ஞாயிறன்று 31 ந்தேதி மூன்றாவது பொங்கல் வைக்கப்படும்.