திருவள்ளூர்: மணவாளநகர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவள்ளூர் அடுத்த, மணவாளநகர், மறைமலை அடிகள் தெருவில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவில் வளாகத்தில், ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குங்கும அர்ச்சனை, மலர் அர்ச்சனை, விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு, சக்தி பீடங்களில் பூஜிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா சுசிலா தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.