பதிவு செய்த நாள்
28
ஜூலை
2022
09:07
தஞ்சாவூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் திருவையாறு அய்யாறப்பர் கோவில் புஷ்ப படித்துறையில், புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
ஆடி அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை நாட்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாட்கள். இந்த நாட்களில், பிதுர் தோஷம் நீங்குவதற்காக கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு சென்று, முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்வது வழக்கம். நேற்று, ஆடி அமாவாசை என்பதால், தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐய்யாறப்பர் கோவில் அருகே, காவிரி ஆற்றின் கரையில் உள்ள புஷ்ப படித்துறையில், ஏராளமானோர் புனித நீராடிய பின், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதே போல, கும்பகோணத்தில், காவிரி, அரசலாறு, மகாமக குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.