தேவிபட்டினம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டியும், தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, திதி கொடுப்பதற்காக ஏராளமானோர், அதிகாலை முதல் நவபாஷாண கடற்கரையில் கூடினர். தொடர்ந்து, பக்தர்கள் நவக்கிரக பகுதிக்கு வரிசையாக பேரிக்காடுகள் மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கடலில் புனித நீராடிய பக்தர்கள், நவக்கிரகங்களை சுற்றி வந்து தரிசனம் செய்து, முன்னோர்களுக்கு, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.