பதிவு செய்த நாள்
28
ஜூலை
2022
05:07
மேட்டுப்பாளையம்: அமாவாசை முன்னிட்டு, அம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டன.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை, 4:00 மணிக்கு நடை திறந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4:30 மணிக்கு, பக்தர்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது. ஆடி அமாவாசை என்பதால், காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து, பவானி ஆற்றில் குளித்த பின், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன் சுவாமியை வழிபட்டுச் சென்றனர். மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையம் காளியாதேவிபுரத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று காலை, 6:00 மணிக்கு நடை திறந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பூசாரிகள் காளியம்மாள், பழனிசாமி ஆகியோர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதைத்தொடர்ந்து மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். ஆடி அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில், பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.