அரியலூர்: அரியலூர் மின்நகர் அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.அரியலூர் மின்நகரில் உள்ள அரியநாச்சியம்மன், மாணிக்க விநாயகர், ஆகாசகருப்பு கோவிலின் 13ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடந்தது. அரியலூர் செட்டி ஏரிக்கரையிலிருந்து மங்கல வாத்தியத்துடன் புறப்பட்ட பக்தர்கள், பால்குடம், அலகு காவடி மற்றும் தீச்சட்டி ஏந்தி, ஜெயங்கொண்டம் சாலை வழியாக, மின் நகரில் உள்ள வீதிகளில் ஊர்வலம் நடத்தி, கோவிலை அடைந்தனர்.தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை செய்யப்பட்டது. பக்தி சிரத்தையுடன் நடந்த இவ்விழாவில் ஆலய நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.