ஆடி பொங்கல் விழா: சிறப்பு அலங்காரத்தில் பகவதி தேவநாயகி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2022 08:07
அவிநாசி: பொங்கல் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பகவதி தேவநாயகி அம்மன் காட்சியளித்தார்.
அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பகவதி தேவநாயகி கோவில், 13ம் ஆண்டு விழா மற்றும் 53ம் வருட பொங்கல் விழா வருடாவருடம் ஆடி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, விநாயகருக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. மேலும் மாவிளக்கு பூஜை,அம்மை அழைத்தல், சிறப்பு தீபாராதனை உள்ளிட்டவைகள் பகவதி தேவநாயகி அம்மனுக்கு நடைபெற்றது. இதனையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். மேலும், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.