பதிவு செய்த நாள்
02
ஆக
2022
11:08
உடன்குடி: குலசேகரன் பட்டணம் , முத்தாரம்மன் கோயில் ஆடிக் கொடை விழா, மாக்காப்பு பூஜையுடன் துவங்கியது . இன்று (2ம் தேதி) அம்மன் கும்பம், தெரு வீதி உலா நடக்கிறது.
தசரா திருவிழாவில், தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயில் ஆடிக் கொடைவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக் கொடை விழா நேற்று (1ம் தேதி) இரவு 9:00 ணிக்கு மாக்காப்பு தீபாராதனையும். இரவு 10:00 மணிக்கு வில்லிசையும் நடந்தது. இன்று (2ம் தேதி) காலை 7:00மணி, காலை 8:30 மணி, மாலை 5:00 மணி, இரவு 7 : 00 மணிக்கும் சிறப்பு அபிஷேகம், பகல் 10:00 மணிக்கு கும்பம் தெரு வீதி வருதல், மதியம் 12:00 ணிக்கு அன்னதானம், இரவு 8:00 மணிக்கு வில்லிசை, இரவு 9:00 ணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11:00 மணிக் கு கு ம்பம் திருவீதி வருதல் நடக்கிறது. இரவு முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
அம்மனை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். காலை முதலேயே நீண்ட வரிசையில் பக்தர்கள் நிற்பார்கள். பக்தர்களின் வசதிக்காக குடி நீர், கழிப்பிட வசதி கள் கோயில் மூலம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் , உடன்குடியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை (3ம் தேதி) காலை 8:00 மணிக்கு அன்னதானம், காலை 9:00 ணிக்கு சிறப்பு மகுட நிகழ்ச்சி, காலை 11:00 மணிக்கு கும்பம் வீதி உலா, மதியம் 12:00 ணிக்கு அன்னதானம் , மாலை 5:00 ணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் இராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.