பதிவு செய்த நாள்
02
ஆக
2022
11:08
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில், ஆடிப்பூர உற்சவ விழாவில், நேற்று கமலாம்பாள் தேரோட்டம் நடந்தது.திருவாரூர் தியாகராஜர் கோவிலில், கமலாம்பாள் ஆடிப்பூர உற்சவ விழா, கடந்த, 22ம் தேதி துவங்கியது. அன்று முதல், தினமும், பூத வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று கமலாம்பாள் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை ஒட்டி, காலை, 10:30 மணிக்கு, தேருக்கு அம்பாள் எழுந்தருளினார். பகல், 3:45 மணிக்கு, அம்பாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழவிதியில் புறப்பட்ட தேர், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக, மாலை, 6:07 மணிக்கு நிலைக்கு வந்தது. இன்று விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.திருவாரூர் தியாகராஜர் கோவில், ஆடிப்பூர உற்சவத்தை ஒட்டி, நேற்று கமலாம்பாள் தேரோட்டம் நடந்தது.