பதிவு செய்த நாள்
02
ஆக
2022
05:08
திருச்சுழி: திருச்சுழி கோயிலில், ஆடி தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்சுழியில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட, துணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் சாமி கோயிலில் ஆடி தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக திருமேனிநாதருக்கும், துணைமாலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின், தங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து, கொடி ஏற்றப்பட்டது. விழா 10 நாட்கள் நடைபெற நடைபெறும். தினமும் திருமாலையம்மன், துணைமாலை அம்மன் குதிரை, அன்னம், காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். ஆகஸ்ட் 10 ம் தேதி, மாலை 4 மணிக்கு, திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு, அங்குள்ள குண்டாற்றில் எழுந்தருளி, துணைமாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். உள்ளூர், வெளியூரை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வர்.