திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நிறை புத்தரிசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 03:08
திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், நேற்று நிறை புத்தரிசி விழா நடந்தது. முன்னதாக அதிகாலை திருவட்டார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது . அதன் பிறகு நெற்கதிர்கள் ஊர்வலமாக ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளிய ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதே வி, பூதேவி விக்ரகங்கள் முன்பு நெற்கதிர்கள் படைக்கப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.