செஞ்சி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு பெண்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 04:08
செஞ்சி: வரலட்சுமி நோன்பை முன்னிட்டு செஞ்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பெண்களுக்கான முக்கிய விரதங்களில் வரலட்சுமி விரதம் முக்கியமானது. சுமங்கலி பெண்கள் குடும்ப நலனுக்காகவும், கணவனின் நலனுக்காகவும், விரதமிருந்து நோம்பு எடுப்பார்கள். இன்று வரலட்சுமி நோன்பு தமிழக முழுவதும் அம்மன் கோவில்களில் கொண்டாடப்பட்டது. செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி நோம்பு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் விரதம் இருந்து நோன்பு எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.