பதிவு செய்த நாள்
09
ஆக
2022
08:08
சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சட்ட தேரோட்டம் நடந்தது.
சிவகாசி சிவன் கோயில் ஆடித்தபசு திருவிழா ஜூலை 31 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாதாரதனைகள் நடந்தது. தினமும் இரவு சுவாமி, அம்பாளுடன் ரிஷப, காமதேனு, சிம்ம, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சட்டத் தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை தபசு காட்சி திருவிழா நடைபெறும்.
மின் இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை: தேரோட்டம் நடைபெறும் போது தேர் வலம் வரும் பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும். ஆனால் நேற்று சட்ட தோரோட்டம் நடக்கும்போது ரத வீதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. ஏனெனில் மின் துறையினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் யாரும் வரவில்லை. ஆனாலும் தேர் 100 மீட்டர் வந்த பின்னர் கடை கோயில் அருகே மின் ஒயர் உரசு நிலை ஏற்பட்டது. இதனால் தேர் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பிறகு மின் துறையினர் வந்து, மின் இணைப்புகளை ரத்து செய்த பின்னர் மீண்டும் தேரோட்டம் நடந்தது. தேர் ரத வீதியிலேயே ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.