ஆடிச்செவ்வாய்: நோய் நீங்கி நலமுடன் வாழ கூழ் ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2022 07:08
மதுரை: வேடர்புளியங்குளம், ராகவேந்திர நகரில், ஆடிச்செவ்வாயை முன்னிட்டு கூழ் ஊற்றி வழிபாடு நடைபெற்றது.
ராகவேந்திர நகரில் கம்பு, கேழ்வரகு, அரிசி கலந்து கூழ் தயாரிக்கப்பட்டு, வேம்பை மந்தையம்மனாக பாவித்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அனைவருக்கும் கூழ் வழங்கபட்டது. ஆடிச்செவ்வாய் கிழமைகளில் அம்மனை வழிபடுவது சிறப்பு. அம்மனுக்கு படைத்த கூழைக் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் நீங்கவும், ஒற்றுமைக்காகவும் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்தாக மக்கள் கூறினர். விழாவில் ஊராட்சி மன்றத்தலைவர் கண்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.