பதிவு செய்த நாள்
10
ஆக
2022
03:08
மேட்டுப்பாளையம்: வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷம் சிறப்பு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன், முருகர் ஆகிய சுவாமி சன்னதிகள் உள்ளன. ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில், நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட, 16 வகை திரவிய பொருட்களால் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.