லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத சிறப்பு பிரதோஷம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2022 03:08
மேட்டுப்பாளையம்: லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத சிறப்பு பிரதோஷம் நடந்தது. சிறுமுகை - சக்தியமங்கலம் மெயின் ரோட்டில், சின்னக்கள்ளிப்பட்டி அருகே ரங்கம்பாளையத்தில், யோகவள்ளி சமேத லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் சிறப்பு பிரதோஷத்தை முன்னிட்டு, அதர்வண வேத சிறப்பு யாகமும், 16 வகை திரவியங்களைக் கொண்டு லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. அர்ச்சகர்கள் ரங்கப்பிரியன், வெங்கடேஷ் பிரசாத், முத்துக்கிருஷ்ணன் சுவாமி ஆகியோர் சிறப்பு பூஜைகளை செய்தனர். இவ்விழாவில் பங்கேற்ற ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.