முக்களத்தி அம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2022 01:08
திட்டக்குடி: திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி நடந்த 108 குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவிலில், நான்காம் ஆடி கடைசி வெள்ளியையொட்டி, 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை 10.30மணிக்கு கோவில் அர்ச்சகர் குமரன் முன்னிலையில், 108 சுமங்கலி பெண்கள் இணைந்து கோவில் வளாகத்தில் குத்துவிளக்குகளை ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து முக்களத்தி அம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.