ஆடி கடைசி வெள்ளி பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 12:08
பெரியகுளம்: பெரியகுளம் பகுதிகளில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரமும், கூழ் பிரசாரமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. பாலசுப்பிரமணியர் கோயில் அழகு நாச்சியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பம் ரோடு காளியம்மன் கோவிலில் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பஜார் வீதி காளியம்மன் கோயில், திரவுபதி அம்மன் கோயில், தென்கரை கீழரத வீதி காளியம்மன் கோயிலில் சிவலிங்கம் மற்றும் அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. தென்கரை உத்தம காளியம்மன், தண்டுபாளையம் மகா சக்தி மகா காளியம்மன், வடகரை பள்ளத்துகாளியம்மன், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. நல்லகருப்பன்பட்டி நாகசக்தி அம்மன் கோயில் வளாகம் மாசாணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.