காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வெள்ளி நாக படகு, கிரீடம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 12:08
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு அமெரிக்காவை சேர்ந்த சீதா மகாலட்சுமி என்ற பக்தர் குடும்பத்தினர் 5,லட்சத்து 70 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நாகபடகு கோயில் வளாகத்தில் உள்ள முருத்யுஞ்சய லிங்கத்திற்கு மற்றும் பாதாள விநாயகருக்கு வெள்ளி கிரீடத்தையும் காணிக்கையாக கோயில் அதிகாரிகளிடம் வழங்கினர். இதே போல் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள தொண்டமநாடு எகுவ வீதியை சேர்ந்த வெங்கடசுப்பா ரெட்டி - சியாமளா என்ற பக்தர் 20 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி (அம்மன் முகத்தை ) கோயில் வளாகத்தில் உள்ள துர்கை அம்மனுக்கு வழங்கினர். இவர்களுக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூறு. தாரக சீனிவாசலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆகியோர் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர் . சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வேத பண்டிதர்களால் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டதோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.