முடிவுக்கு வரும் ஆடி மாதம் : குலதெய்வ கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2022 07:08
செஞ்சி: ஆடி மாதம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று குலதெய்வ கோவில்களில் நேர்த்தி கடன் செலுத்த பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு என்பது மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. அவரவர் குடும்பங்களுக்கான குலதெய்வ கோவில்களில் ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். குழந்தைகளுக்கு சிகை நீக்கி காது குத்தும் நிகழ்ச்சி நடத்துவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு கோவில்களில் பூஜை, விழா நடத்த அரசு தடை விதித்திருந்தது. இதனால் பல குடும்பங்களில் குழந்தைகளுக்கு மொட்டையடித்த காது குத்துவது தடை பட்டிருந்தது. இந்த தடை நீக்கப்பட்டதால் ஆடி மாதம் முழுவதும் கோவில்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளையுடன் ஆடி மாதம் முடிவடைய உள்ள நிலையில் நேற்று குலதெய்வ கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலிலும், செஞ்சி அடுத்த மேளச்சேரியில் காட்டின் நடுவில் உள்ள பச்சையம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமானவர் குழந்தைகளுக்கு சிகை நீக்கி, காது குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழக முழுவதும் குலதெய்வ கோவில்களில் கூட்டம் அலைமோதியது.