Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : ஆவணி மாத பலன் விருச்சிகம் : ஆவணி மாத பலன் விருச்சிகம் : ஆவணி மாத பலன்
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை)
துலாம் : ஆவணி மாத பலன்
எழுத்தின் அளவு:
துலாம் : ஆவணி மாத பலன்

பதிவு செய்த நாள்

15 ஆக
2022
07:08



சித்திரை - 3, 4:
சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய உங்களுக்கு இந்த மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பணியாளர்கள்மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. கலைத்துறையினர் வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.  மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பரிகாரம்: காவல்தெய்வத்தினை தினமும் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஆக 19, செப் 15, 16
அதிர்ஷ்ட நாள்: ஆக 30, 31

சுவாதி:
புத்தி சாதூரியமும் அறிவு திறனும் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் பணவரவு அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். பணியாளர்கள்மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.  கவனமாக பேசுவது நல்லது.  அரசியலில் உள்ளவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்
சந்திராஷ்டமம்: ஆக 20, செப் 16, 17
அதிர்ஷ்ட நாள்: ஆக 30, 31

விசாகம் - 1, 2, 3:
நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் உங்களுக்கு இந்த மாதம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் உள்ளவர்கள் மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஆக 21, செப் 17, 18
அதிர்ஷ்ட நாள்: ஆக 31, செப் 01

 
மேலும் வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »
temple news
மேஷம்; அசுவினி: ஞான மோட்சக்காரகனான கேது, ரத்தக்காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்து, எதையும் ... மேலும்
 
temple news
ரிஷபம்; கார்த்திகை 2,3,4 ம் பாதம்சூரியன், சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வமும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புதன், செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சி யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்: குரு,சந்திரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு புத்தி கூர்மையும், அறிவாற்றலும், ... மேலும்
 
temple news
மகம்: கேது, சூரியனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெய்வ அருளும் ஈடற்ற சக்தியும் இருக்கும். வைகாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar