உலகத்தின் உயிராகச் சூரியபகவான் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜூர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதய நோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாகச் சூரியனுக்கு ரத்தத்தை அர்க்கியமாக (கைகளில் வார்த்து சூரியனுக்கு சமர்ப்பித்தல்) இருந்து வந்தது தெரிகிறது.