நாகம்மாள் கோயில் திருவிழா: ஐந்தாயிரம் பக்தர்கள் பால்குடம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2022 03:08
மேலூர்: மேலூரில் நாகம்மாள் கோயிலின் 58 ம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு நேரத்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. தவிர 4 அடி முதல் 20 அடி வரை பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோயில் முன்பு செவ்வாய் பொங்கல் வைத்தனர். இன்று(ஆக 17) முளைப்பாரி ஊர்வலமும், ஆக 18 ல் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது. 20 அடி நீளமுள்ள ஒரே அலகில் 5 பேர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியது குறிப்பிடதக்கது.