Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் விநாயகர் கோவில் சதுர்த்தி ... சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் : புதிய இடத்தில் சிலை வைக்க கூடாது சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று மகா விஷ்ணுவைப் போற்றும் காமிகா ஏகாதசி விரதம் : பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
இன்று மகா விஷ்ணுவைப் போற்றும் காமிகா ஏகாதசி விரதம் :  பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

22 ஆக
2022
05:08

இன்று (22ம் தேதி )சுபகிருது வருடம், ஆவணி 06, திங்கட்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை ஏகாதசி திதி. மகா விஷ்ணுவைப் போற்றும் காமிகா ஏகாதசி விரதம்

காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணிய த்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகிறார். அதில் சூரிய கிரகணத் தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்த மாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார். நம் வாழ்வில் ஒவ்வொரு கணத்தையும் இறைச்சிந்தனை யில் செலவிட வேண்டும் என்கின்றன ஞான நூல்கள். ஆனால், இந்த உலக வாழ்வில் அது ஞானிகளைத் தவிர மற்றவர்களுக்குச் சாத்தியமே இல்லை. இந்த உலக வாழ்வு பாவ புண்ணியங்கள் நிறைந்தது. அறிந்தும் அறியாமலும் இரண்டையும் செய்யும் தன்மையை உடையது. இதனால் உண்டாகும் தீய மற்றும் நற்பலன்கள் நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். நற்பலன்களை மனம் உவந்து அனுபவிக்கும் நாம் தீய பலன்கள் ஏற்படும் போது திகைத்து வருந்துகிறோம்.

நம்மையறியாமல் நாம் செய்த பாவங்கள் நீங்க வழிவகை தேடியலைகிறோம். அப்படி அலையும் மனிதர்களுக்காக நம் முன்னோர்கள் கண்டு சொன்ன உபாயமே விரத நாள்கள்.ஆதிகேசவ பெருமாள் விரதங்களில் உயர்ந்தது ஏகாதசி விரதம். இதன் மகிமையை புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. ஒரு மாதத்தில் இரண்டு ஏகாதசி திதி வரும். ஓர் ஆண்டில் 24 ஏகாதசி திதிகள். சில நேரம் 25-ம் வருவதுண்டு. ஆனால், ஒவ்வொரு ஏகாதசியும் ஒரு சிறப்பான பலனை நமக்கு தரவல்லது. ஒவ்வொரு மருந்தும் ஒரு குறிப்பிட்ட நோயைத் தீர்ப்பதுபோல ஒவ்வொரு விரதமும் ஒரு சிறப்பான பலனைத் தரும். அப்படி, தாங்கள் அறியாமல் செய்த பாவங்களால் துயருறுபவர்கள் தங்கள் பாவங்கள் தீர்ந்து நற்பலன் களை அடைய உதவும் ஏகாதசி காமிகா ஏகாதசி.

காமிகா ஏகாதசி: ஏகாதசி என்றாலே அது பெருமாளைப் போற்றும் நாள். அதிலும் காமிகா ஏகாதசி, பெருமாளின் நாமங்களை ஜபம் செய்து போற்ற வேண்டிய தினம்.

இந்தத் தினத்தின் மகிமைகள் குறித்து ஏகாதசி மகாத்மியம் சொல்கிறது. யார் காமிகா ஏகாதசியின் மகத்துவங்களைக் கேட்கிறார்களோ அவர்கள் யாகங்களில் உயர்ந்த யாகமான அஸ்வமேத யாகத்தைச் செய்த பலனைப் பெறுவார்கள் என்று சொல்கிறது. இத்தனை சிறப்பித்துச் சொல்லப்படும் காமிகா ஏகாதசியின் சிறப்புகளை பிரம்மன் தன் புதல்வரான நாரதருக்குச் சொல்வதாக அமைகிறது.காமிகா ஏகாதசி விரதம் அளிக்கும் புண்ணியத்தை பிரம்ம தேவர் பட்டியலிடுகிறார். அதில் சூரிய கிரகணத்தன்று குருக்ஷேத்திர பூமியில் ஒருவர் புண்ணிய தீர்த்தமாடினால் கிடைக்கும் பலன்கள் அல்லது அந்த வேளையில் பூமி தானம் செய்தால் ஏற்படும் புண்ணிய பலன்கள் உண்டாகும் என்கிறார். புண்டரீகாக்ஷ பெருமாள் குருக்ஷேத்திரம் என்பது மகாபாரத யுத்தம் நிகழ்ந்த இடம். ஆனாலும் தர்மத்தை பகவான் கிருஷ்ணன் நிலைநாட்டிய புண்ணிய பூமி. அந்தப் புண்ணிய பூமியில் சூரிய கிரகண வேளையில் செய்யும் கிரியைகள் பல மடங்கு புண்ணியம் அருள்பவை என்கின்றன புராணங்கள். மேலும் பூமி தானம் என்பது மிகவும் உயர்ந்த தானமாகப் போற்றப்படுகிறது. நம் வாழ்வும் ஒரு யுத்தக்களம் போன்றதே. அந்த யுத்தக்களத்தில் நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் நமக்கு புண்ணிய பலன்களைத் தருவதோடு பகவானின் அனுகிரகத்தையும் பெற்றுத்தரும்.

துளசியின் மகிமை: காமிகா ஏகாதசியின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் பிரம்ம தேவர் துளசியின் பெருமையையும் கூறியுள்ளார். இந்த காமிகா ஏகாதசியில் துளசி கொண்டு பகவானைத் துதிக்கக் கிடைக்கும் பலன்களையும் விவரிக்கிறார். காமிகா ஏகாதசி அன்று ஸ்ரீஹரியை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். மதிக்க முடியாத தங்கத்தையும் வைர வைடூரியங்களையும் கொண்டு அர்ச்சிப்பதை விட ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது.  துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐதிகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும். விஷ்ணுதுளசிச் செடிக்கு நீரூற்றி அருகே ஓர் விளக்கேற்றிக் கோலமிட்டு நமஸ்காரம் செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அணுகாது.  மேலும், இந்த நாளில் புதிதாகத் துளசிச் செடி நடுவது மிகவும் மங்களமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு யம வாதை இருக்காது.

தினமும் துளசி மாதாவின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுபவர்களின் புண்ணியக் கணக்கை சித்திர குப்தனாலும் அளவிட முடியாது என்று துளசியின் பெருமையையும் அதைக் கொண்டு செய்யும் வழிபாட்டின் மகிமைகளையும் பிரம்ம தேவர் விவரிக்கிறார். வேறெந்த ஏகாதசியின் மகிமைகளைக் குறிப்பிடும் போதும் இந்த அளவுக்கு துளசியின் பெருமைகளை பிரம்ம தேவர் எடுத்துரைக்க வில்லை. எனவே, தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் என்பதில் உபவாசம் ஒரு நாள் என்றாலும் விரதமுறை மூன்று நாள்கள் சேர்ந்தது. தசமி திதி அன்றே விரதம் தொடங்கிவிடுகிறது. தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி திதி அன்று செய்ய வேண்டிய பூஜைகளுக்காகவும் தீர்த்தத்தில் சேர்ப்பதற்காகவும் வேண்டிய துளசி இலையை தசமி அன்றே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று துளசி இலையைப் பறிப்பது பாவம் என்கின்றது சாஸ்திரம்.

மறுநாள் ஏகாதசி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசி சோற்றைத் தவிர்த்து ஒரு வேளை உணவு உட்கொள்ள லாம். பழம் அல்லது பால் ஆகியவற்றை பகவானுக்குப் படைத்து உண்ணலாம். ஏகாதசி நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் நாம ஜபத்திலுமே செலவிட வேண்டும். துவாதசி அன்று காலை பாரனை முடித்து விரதத்தை முடிக்கலாம்.    *எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மத்தியப் பிரதேசம்; மகா கும்பமேளாவையொட்டி, ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனத்தில் இருந்த ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
கோவை; உ.பி.,யிலுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி, ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 12வது நாள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar