ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில், மத்திய அரசின் மரபு சார எரிசக்தி துறை நிதி மூலம், சூரிய சக்தி மின்விளக்குகள் நிறுவும் பணி நடந்து வருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 50 லட்சம் ரூபாயில் சூரிய சக்தியில் மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இதற்காக, கோயில் மேல்தளத்தில், "சோலார் தகடுகளை, பொருத்தும் பணியில், மில்லினியம் பினர்ஜி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதன் மூலம் உற்பத்தியாகும், 20 கிலோ வால்ட் மின்சாரம், பேட்டரிகள் மூலம் சேமிக்கப்பட்டு இரவில் விளக்குகள் எரிவதற்கு பயன்படுத்தப்படும்.முதல் கட்டமாக சுவாமி, அம்பாள் சன்னதிகளில் தேவையான இடங்களில், விளக்குகள் பொருத்தும் பணி துவங்கப்படும்.