பதிவு செய்த நாள்
17
ஆக
2012
11:08
மேட்டூர்: மேட்டூர் அருகே கோட்டையூர் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்தனர். மேட்டூர் தாலுகா, கொளத்தூர் அடுத்த கோட்டையூரில், பிரசித்த பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், ஆடி மாதம் மாரியம்மன் கோவில் பண்டிகை நடக்கும். கொளத்தூர், கருங்கல்லூர், காவேரிபுரம், கோவிந்தபாடி உள்ளிட்ட சுற்றுகிராம பக்தர்கள் மட்டுமின்றி, சேலம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள், பண்டிகையில் பங்கேற்று, கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துவர். நேற்று, கோட்டையூர் மாரியம்மன் கோவில் பண்டிகை துவங்கியது. பண்டிகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவிரியாற்றில் இருந்து கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பண்டிகையை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அசம்பாவிதம் தடுக்க, கோட்டையூரில், டி.எஸ்.பி., கோபால் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.