அரவங்குறிச்சி முத்துக் கருப்பணசாமிக்கு புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2022 09:08
செந்துறை,நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி அரவங்குறிச்சி கரையம்மன், மலையம்மன், முத்துக் கருப்பணசாமி ஆகிய கோயில்களில் புறவி எடுப்பு திருவிழா நடந்து வருகிறது.
விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 24 காப்பு கட்டுதல், சுவாமி அலங்காரம் , வானவேடிக்கையுடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் கரையம்மன், மலை அம்மன் சாமிகளுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முத்துக்கருப்பணசாமிக்கு குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்குள்ள கோவில் வீட்டிலிருந்து மேளதாளம் முழங்க மாலை எடுத்துவரப்பட்டது. அங்கு சர்வ அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளியது. தொடர்ந்து மாலை மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அதிர்வெட்டுகள் முழங்க சாமி பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 50க்கும் மேற்பட்ட கிடாய் வெட்டப்பட்டு இன்று ஆக 27 காலை அன்னதானம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.