பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் ஈஸ்வரன் கோயிலில், கருணைபுரி கைலாசநாதர் திருக்கூட்டத்தின் சார்பில், பன்னிரு திருமுறைகள் உபந்யாசம் நடந்தது.
சூரியநாயனார் கோயில் ஆதீனம் சிவாக்கர தேசிக சுவாமிகள் அருளாசி வழங்கினார். அப்போது, வீடுகளில் பெண்கள் எதிர்மறையான எண்ணங்களை விடுத்து, நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ள வேண்டும். இதன் பொருட்டு திருவாசகம், தேவாரம் போன்றவற்றில் பதிகங்கள் பாடப்பட்டுள்ளன. அவற்றை காலை, மாலை நேரங்களில் பாடிட வேண்டும். மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஈஸ்வரன் கோயிலில் கருணைபுரி கைலாச நாதர் சிவனடியார் திருக் கூட்டத்தால், இங்குள்ள 63 நாயன்மார்கள் சந்ததியில் தேவாரம், திருவாசகம் இசைக்கப்படுகிறது. இதில் மக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். ஆன்மீக பயணத்தில் ஒத்துழைப்பு அளித்து வரும் தேவஸ்தானத்தினர் மற்றும் சிவனடியார் கூட்டத்தினருக்கு தொடர்ந்து பக்தர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும், என்றார்.