கல்லிடைக்குறிச்சி கோயில் மதில்சுவர் சாய்வதை தடுக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2022 10:08
கல்லிடைக்குறிச்சி: கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியசுவாமி கோயிலில் மதில்சுவர் சாய்ந்து விழுவதை தடுக்க தடுப்புச்சுவர் உடனடியாக அமைக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி கரையில் சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் மாளிகை மடத்திற்கு தென்புறம் இயற்கை எழிலோடு கோயில் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் சின்னப்பட்டம் கனகசபாபதி ம்பிரான் வாழ்ந்த பூமி. பழமைவாய்ந்த இக்கோயிலில் விநாயகர், சுப்பிரமணியசுவாமி பிரதானமாக அருள்பாலிக்கின்றனர். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலில் கல் மண்டபங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி சதுர்த்தி விழா, கந்தசஷ்டி விழா உள்ளிட்ட பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. பழ மைவாய்ந்த இக்கோயிலின் மதில்சுவர் பலம் இழந்து, ஒரு புறமாக சாய்ந்துள்ளது. இந்த மதில்சுவர் முற்றிலும் ம் அடைந்து விழுவதற்கு முன்பாக முட்டுக் டுத்து தடுப்புச்சுவர் அமைத்து, மதில் சுவரை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மழைக்காலங்களில் கோயில் உட்பகுதியில் மழைநீர் தேங்கி, பக்தர்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது. தேங்கும் மழைநீர் உடனுக்குடன் வெளியே செல்லவும் வழிவகை செய்யவேண்டும்.