ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். காலை 6:30 மணிக்கு முதல் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.ஏற்பாடுகளை தக்கார் பெரியசாமி, அறங்காவலர் நாகராஜன் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் பகுதி போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.