மெரினா போல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் : மக்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2022 06:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் கருங்கல் சேர் அமைத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதன்பின் மாலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் உள்ள நடைபாதை, பூங்காவில் சுற்றுலா பயணிகள் நின்று பொழுது போக்குவார்கள். இதில் அக்னி தீர்த்த கரையில் இருள் சூழ்ந்து கிடப்பதால், இங்கு சுற்றுலா பயணிகள் அமருவதை தவிர்த்து விடுவார்கள். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சமீபத்தில் அக்னி தீர்த்த கரையில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்து, இருளை பகலாக்கினர். மேலும் பயன்பாடின்றி கிடந்த 20 கருங்கல் சேர்களை நேற்று முன்தினம் அக்னி தீர்த்த கரையில் போட்டனர். மெரினா போல் அக்னி தீர்த்தம் உள்ளதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடல் காற்று, கடல் அலையை கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.