நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2022 06:08
பெரியகுளம்: ஹரே ராமா ஹரே ராமா மகா மந்திரத்தை கூறினால் எல்லா விதமான கஷ்டங்களிலிருந்தும் விடுபடலாம் என ராமசாமி பாகவதர் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்தினார்
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆன்மிகச் சொற்பொழிவு நடந்து வருகிறது.
முரளிதரசுவாமி சீடர் ராமசாமி பாகவதர் பேசுகையில்: நாமத்தின் மூலமாக இறைவனை வணங்குவதற்கு பாகவத தர்மம் என்று பெயர் இதற்கு ஆதாரமாக ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது. கிருஷ்ணா பால கோவர்த்தன லீலைகளில்,பிருந்தாவனத்தில் மக்கள் சிரமமான சூழ்நிலையில் பகவானை தஞ்சம் அடைந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி காப்பாற்றினார். இதுபோல நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் இருந்து விடுபட ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தை கூறி எல்லாவிதமான கஷ்டங்களிலிருந்து விடுபட்டு எல்லா நலமும் பெறலாம் என்றார். இன்று (ஆக. 28) ராதா கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்ய தாஸ் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.