திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகா ரமண பக்த கோலாகலன் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலன் கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 8:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ராதிகாரமான பக்த கோலாகலன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வேத மந்திரங்கள் முழங்க எழுந்தருளினார். கிருஷ்ணபிரேமி சுவாமிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தேர் முக்கிய வீதி வழியாக இழுத்துச் செல்லப்பட்டு மாலை நிலையை அடைந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.