உத்திரமேரூர் ; நீர்குன்றம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் கற்பக வினாயகர் கோவில் திருப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளதையடுத்து செப்,5ம் தேதி மகா கும்பாபிேஷக விழா நடைபெற உள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது நீர்குன்றம் கிராமம். இக்கிராமத்தில், கற்பக வினாயகருக்கு சிறிய அளவிலான சிலை வைத்து, கடந்த ஆண்டுகளில் முன்னோர்கள் வழிப்பட்டு வந்தனர். சிறிய அளவிலான சிலை இருந்த அப்பகுதியில், கற்பக வினாயகருக்கு புதியதாக கோவில் கட்டி வழிபட அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர். அதன்படி, கோவில் கட்டுமானப் பணி துவங்கி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணி முடியும் தருவாயில் உள்ளதையடுத்து செப்,5ம் தேதி கும்பாபிேஷக விழா நடைபெற உள்ளது.