பதிவு செய்த நாள்
30
ஆக
2022
08:08
பெரம்பலுார், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு, 250 ஆமை சிலைகள் மூலம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இல்லத்தரசி செய்துள்ள கூர்ம விநாயகர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரத்தைச் சேர்ந்த இல்லத்தரசி பிரியா ராஜா,40, கைவினைப் பொருட்கள் மற்றும் அழகு கலையில் ஆர்வம் கொண்ட இவர், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, வித்தியாசமாக விநாயகர் சிலைகளை வடிவமைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். முதன்முதலாக கடந்த 2008ல் கொட்டைப்பாக்கு விநாயகரை தயாரித்து பிள்ளையார் சுழி போட்டார். பின்னர், ஆண்டுதோறும் நவதானிய விநாயகர், பென்சில் துகள் விநாயகர், மாத்திரை விநாயகர், சங்குப்பூ விநாயகர்,மக்காசோளம் விநாயகர் 1,008 பொன்வண்டு விநாயகர் விதவிதமாக வடிவமைத்து வழிபட்டார். நடப்பாண்டு 250.ஆம்னி சிலைகள் மூலம் கூர்ம விநாயகர் செய்துள்ளார் இவர் தயாரித்துள்ளகூர்ம விநாயகர் அனைவரையும் கவருந்துள்ளது.
இதுகுறித்து பிரியா ராஜா கூறுகையில், ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து என்கிறது குறள். நெய்தல் வாழ் மக்கள் வாழ்வு சிறக்கவும், அழிந்து வரும் கடல் வாழ் உயிரினங்களை மீட்பதற்கான விழிப்புணர்வுக்காகவும் 250 ஆமைகள் ஆமை சிலைகள் தயாரித்து, அதனுள் விதைகளை வைத்து கூர்மை விநாயகர் சிலை செய்துள்ளேன். ஆமை மைன்ட் பவரால் முட்டையை வெடிக்க செய்யும். கடல் நீரோட்டத்தை ஆதி தமிழருக்கு உணர்த்திய உயிரினம். 2000 தீவுக்கு மேல் ஆமை வழிகாட்டியின் படி கண்டறிந்தனர். உலக மக்களை ரட்சிக்க எடுக்கப்பட்ட கூர்மா அவதாரம் 2000 மில்லியன் வருடங்களாக தொடர்ந்து வாழ்ந்து வரும் உயிரினம். 2 நிமிடத்திற்கு ஒருமுறை மூச்சுவிட்டு நீண்ட ஆயுள் வாழக்கூடிய உயிரினம். தன்னை காப்பாற்றிக்கொள்ள யாரையும் எதிர் நோக்காதே என்று எடுத்து கூறும் தோற்றம், பொறுமை, அறிவு, அடக்கம், மனவலிமை, ஆன்ம சக்தி மற்றும் பல விஷயங்களை மறைத்து வைத்திருக்கும். ஆமையை போற்றுவோம். செல்வ வளத்தை தரும் சின்னமாக சீன மக்களால் போற்றப்படுவது ஆமை. இத்தனை சிறப்புமிக்க ஆமையை வைத்து இந்த ஆண்டு கூர்ம விநாயகர் சிலை தயாரித்துள்ளேன். இந்த வருடம் செல்வ செழிப்புமிக்க வருடமாக அனைவருக்கும் அமைய கூர்ம கணபதியை வேண்டுகிறேன் என்றார்.