பதிவு செய்த நாள்
06
செப்
2022
02:09
கொல்லங்கோடு: குழிவிளை அருகே கல்லாலுமூடு பத்ரகாளி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை ஒட்டி தேவ பிரசன்னம் நடந்தது. வாவறை மாருதி சுகுமார்ஜி தலைமையில் நடந்த பிரசன்னத்தில் கர்ப்ப கிரகம் அசுத்தம் அடைந் து தேவி கோபத்துடன் உள்ளதாகவும், கணபதி விக்ரகம் சேதமடைந்து உள்ளது எனவும், உபதேவதைகளான சாஸ்தா , இசக்கியம்மன், நாகர், மாடன் மந்திரமூர்த்தி, யோகீஸ்வரன் போன்றவைகளுக்கு நல்ல சைதன்யம் உள்ளது எனவும் தெளிவு பெற்றது. மேலும், மூலஸ்தான பழைய இடத்தில் பவுர்ணமி நாட்களில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், மூலஸ்தான கோபுரத்தை சீரமைத்து வர்ணம் பூச வேண்டும். 12ம் வருட மகா கும்பாபிஷேகத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்தலாம் என தெரிந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் பாலகிருஷ்ணன் , உறுப்பினர் அசோகன் உட்பட பக்தர்கள் செய்திருந்தனர்.