Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமாக ... உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் கோலாகலம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் அதிஷ்டான மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் அதிஷ்டான மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 செப்
2022
10:09

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ஓதசுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் அதிஷ்டான மகா கும்பாபிேஷகம் நாளை 7 ம் தேதி காலை 9.15 மணி மேல் 10.15க்குள் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சுவாமிகள் வரலாறு: நம் பாரத நாடு பழம்பெரும் நாடு. இங்குள்ள மலைகள், நதிகள், காடுகள் இவையாவும் புனிதம் நிறைந்தவை. மகரிகள், முனிவர்கள், தவசீலர்கள் முதலான புண்ணிய புரு­ர்கள் பலர் அவதரித்த புனித பூமி. அவதூதர்கள், ஆத்மஞானிகள் தோன்றி வாழ்ந்து, மக்களை நல்வழியில் நடத்திச்சென்ற பெருமை வாய்ந்த தேசம். எண்ணிலடங்காத சித்தர்கள் நடமாடி, விந்தைகள் பல புரிந்த நாடு நம் இந்தியத் திருநாடு.

சுமார் 300 வருடங்களுக்கு முன் பழநியை அடுத்த பாலசமுத்திரம் என்ற அழகிய சிற்றூரில் ஆசாரம் மிகுந்த அந்தண குடும்பம் வாழ்ந்து வந்தது. அதன் மூதாதையர் ஒருவர் வடக்கே மகாராஷ்டிரா ராஜப்பிரமுகராக பதவி வகித்துள்ளார். பிறகு ஏற்பட்ட வெளிநாட்டார் படையயடுப்பிலும், அரசாங்கத்தில் ஏற்பட்ட மாறுதலான சூழ்நிலையின் காரணமாகவும் இந்தப் புகழ்பெற்ற வம்சம் சிதறுண்டு போயிற்று. அதில் ஒரு பிரிவு பழநிக்கு அருகில் ஆயக்குடியில் தங்கியது. பின்னர் இந்தக்குடும்பம் பாலசமுத்திரத்திற்கு குடி பெயர்ந்தது. இந்தக்குடும்பத்தின் மூலபுரு­ர் பெயர் பரமேஸ்வர ஐய்யர். இவர் காசி- ராமேஸ்வர யாத்திரைக்கு கால்நடையாகவே சென்று பல ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு ஏழு வருடங்களுக்கு பின் வீடு வந்து சேர்ந்தார்.

காசியில் இவர் மனமுருகி இறைவனை வணங்கி தன்னை மறந்த நிலையில் நின்ற பொழுது ஒரு மஹான் இவர் முன் தோன்றி, உனக்கு விசுவநாதனே மகனாகப் பிறக்கப் போகிறான் என்று ஆசீர்வதித்தார். அவர் கூறியபடியே பரமேஸ்வர ஐய்யரின் தர்மபத்தினி கர்ப்பம் தரித்தார். கருவிலே திருவுடைய குழந்தை ஒன்று இப்பூலகில் அவதரிக்கும் போது ஆச்சரியமான சம்பவங்கள் எல்லாம் நிகழும் என்று சொல்வதுண்டு. 1850 ஆம் வருடம் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நம் சுவாமிகளின் சுபஜெனனம் நிகழ்ந்தது. பிரசவ அறையினின்று வேத மந்திரகோ­ம் ஒலித்தது. அறை முழுவதும் ரோஜாவின் நறுமணம் வீசியது. இதைக்கேட்டு, வெளித்திண்ணையில் உட்கார்ந்து இருந்த எல்லோரும் உள்ளே சென்று பார்த்த போது குழந்தை சிரித்தது. முகத்தை தவிர உடல் முழுவதும் ரோஜா இதழ்கள் நிரம்பி இருந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு பிரசவம் பார்த்த ஸ்திரீயும் ஒத்தாசைக்கு உடன் சென்ற வயோதிக சுமங்கலியும் ஸ்தம்பித்து நின்றார்கள். சுவாமிகளின் ஜெனன காலத்தில் அறை முழுவதும் நறுமணம் வீசியது. சந்தன நிறத்துடன் ஆறு அடி உயரத்தில் மூன்று மஹாபுரு­ர்கள் தோன்றினார்கள். ஒருவர் நெற்றியில் நாமமும், மற்றொருவர் விபூதியும், மூன்றாமவர் நெற்றியில் சந்தனமும் தரித்திருந்தார்கள். ஒருவர் கயிலாய மலையிலிருந்து வருவதாகவும், மற்றவர் காசியில் இருந்து வருவதாகவும், மூன்றாமவர் ப்ரும்ம கபாலத்திலிருந்து வந்ததாகவும் கூறி தெய்வீகக் குழந்தையைப் பார்க்க வந்தோம் என்று சொல்லி வேதகோ­த்துடன் குழந்தையின் மேல் ரோஜா இதழ்களைத் தூவி மறைந்ததாகக் கூறினார்கள். இதையயல்லாம் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கி நின்றவர்கள் காதில் பழநிமலைக் கோவில் பூஜை மணியோசை ஓம், ஓம் என்று முழங்கியது.

இதையே சுபசகுனமாகக் கருதி குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று பெயரிட்டார்கள். இந்தக் குழந்தையை எல்லோரும் அன்புடன் சுப்பையா என்று அழைத்தார்கள். சுவாமிகளின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்ற போதிலும் பக்தர்கள் சுப்பையா சுவாமிகள் என்றே கூப்பிடுவார்கள். சிலசமயம் ஓதம் தோன்றுமாம், அதனால் ஓதசுவாமிகள் என்றும் அன்புடன் அழைப்பார்கள். ஒரு சமயம் பெரியகுளத்தில் ஒரு பக்தையின் கணவர் இறந்து விட்டார். இறுதிச் சடங்குக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அந்த பக்தை சுவாமிகளின் பெயரைச் சொல்லி கதறி அழுதாள். உடனே சுவாமிகள் கூட்டத்தினரிடையே தோன்றி வெளியே வாடா என்று கூப்பிட்டார். என்ன ஆச்சரியம் சுவாமிகளின் குரலைக் கேட்டவுடன் அந்த மனிதன் உயிர் பெற்று எழுந்து விட்டான். பக்தைக்கு அனுக்ரகம் செய்த மறுநிமிடமே சுவாமிகள் அந்த இடத்திலிருந்து மறைந்து விட்டார். மற்றொரு சமயம், சுவாமிகளுடைய அண்ணனின் குடும்பம் திண்டுக்கல், சத்திரம் தெருவில் வசித்து வந்தது. அந்த அம்மாள் சுவாமிகளின் பரமபக்தை. தனது மூன்று மாதக்கைக்குழந்தைக்கு முற்றத்தில் வைத்து எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடும் போது கை நழுவி அருகில் இருந்த குறுகிய சாக்கடையில் விழுந்து விட்டது. பேச்சு, மூச்சு இல்லை, ஒரே ரத்தமயம். தெரு ஜனங்கள் கூடி ஜீவனற்ற குழந்தையை வெளியே எடுக்க சாக்கடையை உடைக்க வேண்டுமென்று திட்டமிட்டனர். துக்கம் தாளாமல் அண்ணியார் சுப்பையா சுவாமிகளே, காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதார். கூட்டத்தினரிடையே சுவாமிகள் தோன்றி, எதற்கு என்னைக் கூப்பிட்டாய் என்று சொல்லி குழந்தையை நோக்கி, வாடா வெளியே என்றார். என்ன அதிசயம் !! குழந்தை எவ்வித காயமும் இன்றி தானாகவே உயிருடன் வெளியே வந்தது. மறுநிமிடம் சுவாமிகள் மறைந்து விட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar