பதிவு செய்த நாள்
07
செப்
2022
05:09
சூலூர்: சீபா நகர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
அரசூர் மற்றும் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது சீபா நகர். இங்குள்ள செல்வ விநாயகர் கோவிலில் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, 6 ம்தேதி காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டு கால ஹோமங்கள், பூர்ணாகுதி முடிந்து, இன்று காலை, 6:15 மணிக்கு புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி, மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. காலை, 6:30 மணிக்கு, விமானத்துக்கும், 7:00 மணிக்கு, செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அரசு, வேம்புக்கு திருக்கல்யாணமும், ஊஞ்சப்பாளையம் காவடி குழுவின் காவடி ஆட்டமும், அம்மன் கலைக்குழு வின் ஒயிலாட்டமும் நடந்தது.