பதிவு செய்த நாள்
08
செப்
2022
08:09
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சேகர்பாபு ,சக்கரபாணி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில்கும்பாபிஷேக விழா செப்.2 அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, தீபலட்சுமி பூஜையுடன் துவங்கியது.
செப்.3ல் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், செப்.4ல் வாஸ்து சாந்தி,மிருத்சங்கிரஹணம், முதற்கால யாக பூஜைகள் நடந்தது.செப்.5ல் 2ம், 3ம் கால யாக பூஜை,செப்.6ல் 4,5, ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று ஆறாம் கால யாக பூஜையுடன் கோ பூஜை, ஸ்பர் சாகுதி, மகா பூர்ணாவதி தீபாராதனை நடந்த நிலையில், பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள் யாகசாலை, கோயிலை சுற்றி வர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கருட தரிசனத்துடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றகும்பாபிஷேகம் நடந்தது.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் விசாகன்,திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய தலைவர் ஆர்.வி.என். கண்ணன், கும்பாபிஷேக உபயதாரர்களான மாவட்ட கவுன்சிலர் க.விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, தாசில்தார் சுகந்தி, பிரேமா விஜயன், ஊராட்சி தலைவர்கள் ராஜேஸ்வரி, தமிழரசி, அமராவதி, என்.எம்.கே. டிரேடர்ஸ் மகேஸ்வரன், கோல்டன் ஷேட்ஸ் உரிமையாளர் நகுலன், பா.ஜ.,மாநில ஊடக பிரிவு தலைவர் ஆனந்த கிருஷ்ணன், நத்தம் டில்லோ டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள்
பெத்தன் செட்டியார், லோகநாதன், சுந்தர், ஏழுமலையான் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வேம்பார்பட்டி பரமானந்தன், அல் அம்பலம் குரூப்ஸ் உரிமையாளர் அப்துல் காதர் அம்பலம், கட்டட பொறியாளர் சங்கத் தலைவர் பாண்டி, அர்ச்சனா மாங்காய் கமிஷன் மண்டி உரிமையாளர் ஹரிஹரன், லக்ஷ்மணன் மோட்டார்ஸ் கார்த்திகேயன், நத்தம் கே.எஸ்.எஸ். நிறுவன சேக் சிக்கந்தர் பாட்ஷா, மீனாட்சி ஸ்கூல் தாளாளர் ராஜேஷ் கலந்து கொண்டனர். சிறப்பு அன்னதான ஏற்பாடுகளை அமைச்சர் சக்கரபாணி செய்திருந்தார். இக்கோயில் கும்பாபிேஷகத்தை யொட்டி நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.