திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே சின்னாண்டிவலசையில் கற்பக விநாயகர், முத்துமாரிஅம்மன் , தர்ம முனீஸ்வரர், நொண்டி கருப்பண்ணசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. செ ப்.5ல் முதல் கால யாக சாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுக்கு பின்பு கோ பூஜை, நாடி சந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி அர்ச்சகர் குழுவினர் கும்பாபிஷேகம் செய்தனர். முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 11 வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சின்னாண்டிவலசை கிராம மக்கள் செய்திருந்தனர்.