வாலிகண்டபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2022 05:09
பெரம்பலுார்: வாலிகண்டபுரம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள ஆரியவைஸ்யர்களின் குல தெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன், மற்றும் செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ நாகராஜர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழா செப்.7ம் தேதி புதன் கிழமை கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், துர்காலட்சுமியாகத்தோடு யாக வேள்வி தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், திரவ்யா ஹீதியும் மஹா பூர்னா ஹீதியும் நடைபெற்றது. இன்று நாடி சந்தானம், மங்கள திரவிய யாகத்தோடு யாகசாலையிலிருந்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பட்டு கன்னிகா பரமேஸ்வரி ஆலய கோபுரத்திற்கு வந்தடைந்த பின் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் திரளானோர் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.