Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் பெருமாள் கோயில் ஆவணி ... சிவகங்கை கோயில் விழா : எருமைகளை பலியிட்டு நேர்த்திக்கடன் சிவகங்கை கோயில் விழா : எருமைகளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகையில் கோவிலை மூடியதால் போலீசார் பக்தர்கள் தள்ளுமுள்ளு
எழுத்தின் அளவு:
நாகையில் கோவிலை மூடியதால் போலீசார் பக்தர்கள் தள்ளுமுள்ளு

பதிவு செய்த நாள்

12 செப்
2022
08:09

நாகப்பட்டினம் : நாகையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால், பிரசித்தி பெற்ற கோவிலை போலீசார் இழுத்து மூடியதால், பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கும், போலீசாருக்கும்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில் பழமையான, பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக இரண்டாண்டுகளாக புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால்,  திருவிழா நடைபெறவில்லை.இந்த ஆண்டு கிராம நிர்வாகத்தினர் இரு பிரிவாக செயல்பட்டதால், இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு உருவாகி, இரு தரப்பினரும் தனித்தனியாக பால் அபிஷேகத்திற்கு  ஏற்பாடு செய்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், இரு தரப்பினரிடையே சுமூக தீர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் முயற்சி பலனளிக்காததால், கலெக்டர் அருண் தம்புராஜ்  உத்தரவுப்படி, கோவிலை நேற்று அதிகாலை போலீசார் இழுத்து மூடினர்; ஏராளமான போலீசார் கோவில் முன் குவிக்கப்பட்டனர்.

வழக்கம்போல் காலை, 5:00 மணி முதல் பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள், கோவில் மூடப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோவிலுக்குள் செல்ல முயன்றனர்.  இதனால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் கோவில் முன் சாமியாடி மயங்கியதால் பதற்றம் அதிகரித்தது. ஆர்.டி.ஒ., முருகேசன், ஏ.டி.எஸ்.பி.,  திருநாவுக்கரசு தலைமையிலான அதிகாரிகள், இருதரப்பினரிடையே பேச்சு நடத்தினர். ஐந்து மணி நேரத்திற்கு பின் தீர்வு எட்டப்பட்டு, கோவிலை போலீசார் திறந்து விட்டனர்.அப்பகுதியில் தொடர்ந்து  பரபரப்பான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar