Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென்னங்குடி சௌரிராஜபெருமாள் ... 700 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சிலை கைலாசநாதர் கோவிலில் கண்டுபிடிப்பு 700 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈ.வெ.ரா., திமுக.,வுக்கு முன்பே தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தான்
எழுத்தின் அளவு:
ஈ.வெ.ரா., திமுக.,வுக்கு முன்பே தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தான்

பதிவு செய்த நாள்

14 செப்
2022
09:09

ஈ.வெ.ரா., பிறப்பதற்கும், தி.மு.க., உதயமாவதற்கும் முன்பிருந்தே அதாவது 800 ஆண்டு, 500 ஆண்டு, 400 ஆண்டு என பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகிவிட்டனர். ஆயிரக்கணக்கான கோவில்களில் தாங்களே கடவுளுக்கு நேரடியாக பூஜை செய்து இன்று வரை வழிபாடும் செய்து வருகின்றனர். இக்கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ்தான் இன்றும் செயல்படுகின்றன.

உண்மை நிலை இவ்வாறிருக்க அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியது நாங்கள் தான் என ஈ.வெ.ரா., வழித்தோன்றல் களும், தி.மு.க.,வின் திராவிட மாடல் தலைவர்களும் மார்தட்டி வரலாற்றை திரித்தெழுத முயற்சிக்கின்றனர். இவர்களின் கட்டுக்கதைகளையும், புனைச் சுருட்டையும் வாசகர்களுக்கு அம்பலப்படுத்தவே இந்த சிறப்பு பக்கம். இன்னும் பல நுாற்றுக்கணக்கான ஆதார கோவில்களின் படங்கள் தினமலர் வசமிருக்கின்றன. இடமின்மையால் அவற்றை சேர்க்க இயலவில்லை.

1. திருநெல்வேலி, கடற்கரை கிராமம் உவரி, சுயம்புலிங்க சுவாமி கோவில். பூஜை செய்வோர்: தேசிகர் சமூகத்தார். 1,000 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர்.

2. கோவை, அவிநாசி ரோடு, தண்டு மாரியம்மன் கோவில். பூஜை செய்வோர்: பண்டாரம் சமூகத்தார். 200 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள, இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா அக்னி சட்டி ஊர்வலம், சக்தி கரகம் எடுத்தல் நடக்கிறது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

3. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலோடு இணைந்த அம்பலவாணர் சுவாமி கோவில். பூஜை செய்வோர்: தேவேந்திர குல வேளாளர் சமூகத்தார். 1,000 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர்.

4. கோவை, பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில். பூஜை செய்வோர்: சோழிய வெள்ளாளர் சமூகத்தார். 1,000 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், மாசி, பங்குனி, சித்திரை மூன்று மாதங்களில் நாடு முழுதும் உள்ள சிவனடியார்கள் அகோரிகள் மலை ஏறி வழிபாடு செய்கின்றனர். இவர்களுடன் லட்சக்கணக்கான அனைத்து சமூகத்தைச் சேர்ந்த பக்தர்களும் மலை ஏறி சிவனை வழிபடுகின்றனர்.

5. திண்டுக்கல், நத்தம் மாரியம்மன் கோவில்.பூஜை செய்வோர்: நாயுடு சமூகத்தார். ௧,௦௦௦ ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர்.

6. விருதுநகர் மாவட்டம், சாத்துார், இருக்கன்குடி மாரியம்மன் கோவில். பூஜை செய்வோர்: இல்லத்து பிள்ளைமார் சமூகத்தினர். 300 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர்.

7. ராமநாதபுரம் மாவட்டம், மேலக்கிடாரம் சிவகாமி சமேத திருவனந்தீஸ்வரமுடையார் கோவில். பூஜை செய்வோர்: மறவர் சமூகத்தார். ௮௦௦ ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர்.

8. கோவை, பேரூர், அங்காளம்மன் கோவில். பூஜை செய்வோர்: பிள்ளை சமூகத்தார். 400 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அனைத்து சமூகத்தினரும் வழிபடும் கோவில்.

9. மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் வி. கோவில்பட்டி மதுரோதைய ஈஸ்வரமுடையார் சிவனேசவள்ளி கோயில். ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் பூஜை செய்வோர்: சேர்வை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

10. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், நுாறு ஆண்டுகளை கடந்தது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், பூஜை செய்வோர்: பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

11. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில். பூஜை செய்வோர்: முக்கந்த நாடார் ( பண்டார வகையறா) சமூகத்தார். ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர்.

12. வால்பாறை, முடீஸ், சுப்ரமணிய சுவாமி கோவில். பூஜை செய்வோர்: பட்டியல் இனத்தவர். ௧௦௦ ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அனைத்து சமுதாய மக்கள் பங்கேற்கின்றனர்.

13. மதுரை மாவட்டம் திருமங்கலம் சிவரக்கோட்டை மாரியம்மன் கோயில். ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் பூஜை செய்வோர்: பண்டாரம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

14. மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் முனியாண்டி கோயில். ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் பூஜை செய்வோர்: பட்டியல் இனத்தவர்.

15. பொள்ளாச்சி, ஆனைமலை, தர்மராஜா திரவுபதியம்மன் கோவில். பூஜை செய்வோர்: பிள்ளைமார் சமூகத்தார். ௪௦௦ ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், தை மாதம் குண்டம், தேர்த்திருவிழா நடக்கிறது. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

16. திருப்பூர், பெருமாநல்லுார், கொண்டத்துக் காளியம்மன் கோவில். பூஜை செய்வோர்: பண்டாரம் சமூகத்தார். 400 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடக்கிறது; 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர். அனைத்து சமூகத்தினரும் வழிபடும் கோவில்.

17. கிருஷ்ணகிரி, மதகொண்டப்பள்ளி அரகீஸ்வரர் கோவில். பூஜை செய்வோர்: லிங்காயத் சமூகத்தார். 1,000 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவில், அனைத்து சமூகத்தினருக்கான கோவிலாக உள்ளது.

18. நாமக்கல், பெரியமாரியம்மன் கோவில். ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் பூஜை செய்வோர்: சைவ பிள்ளைமார் சமூகத்தார். 400 ஆண்டு பழமையானது.

19. தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில். 11ம் நுாற்றாண்டில் மதுரையை ஆண்ட வீர பாண்டியன் எனும் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் பூஜை செய்வோர்: சைவ கன்னடியர் எனும் பண்டாரம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

20. கிருஷ்ணகிரி, அகசிப்பள்ளி கன்னம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோவில். பூஜை செய்வோர்: வடுகு நாயுடு சமூகத்தார். 300 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர்.

21. ஏற்காடு, சேர்வராயன் காவேரியம்மன் கோவில். ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், பூஜை செய்வோர்: இந்து மலையாளி, எஸ்.டி., 250 ஆண்டு பழமையானது.

22. ஓசூர் மலை மீது அமைந்துள்ளது, காலபைரவர் கோவில். பூஜை செய்வோர்: முதலியார் சமூகத்தார். 700 ஆண்டு பழமையானது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், அனைத்து சமூகத்தினரும் வழிபாடு செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புவனகிரி; புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. புவனகிரியில் ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.வல்லபை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் ரோப்காரில் பராமரிப்பு பணி நிறைவு பெற்ற நிலையில் இதன் சேவை நேற்று மீண்டும் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அருகே சேவூரிலுள்ள ஸ்ரீ பாலசாஸ்தா ஐயப்பன் கோவிலில், திருப்பணிகள் நிறைவுற்று நேற்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனுார் லெட்சுமி நாராயணப் பெருமாள், பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar