பதிவு செய்த நாள்
21
ஆக
2012
10:08
பெண்ணாடம்: நல்லூர் விநாயகர் கோவில்களில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் தாலுகா, நல்லூர் கிராமத்தில் தென்மேற்கு கற்பக விநாயகர், மூலை செல்வ விநாயகர், ஈசான மூலை சித்தி விநாயகர், தென் கிழக்கு ராஜகணபதி ஆகிய நான்கு கோவில்களில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 17ம் தேதி மாலை 4.30 மணியளவில் உச்சி பிள்ளையார், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை, இரவு 9 மணிக்கு சிறப்பு ஹோமம், தீபாராதனை நடந்தது. 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மேலவீதி கற்பக விநாயகர் கோவிலில் விசேஷ சக்தி பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, மாலை 4 மணிக்கு வடமேற்கு செல்வ விநாயகர், ஈசான மூலை சித்தி விநாயகர் கோவில்களில் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது.நேற்று காலை காலை 7 மணிக்கு கோ பூஜை, 9 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, 9.15 மணிக்கு தென்மேற்கு கற்பக விநாயகர் கோவில், 9.30 மணிக்கு வடமேற்கு மூலை செல்வ விநாயகர் கோவில், 9.45 மணிக்கு ஈசான மூலை சித்தி விநாயகர் கோவில் 10.15 மணிக்கு தென்கிழக்கு ராஜ கணபதி கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.