பதிவு செய்த நாள்
16
செப்
2022
04:09
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவத்தை முன்னிட்டு 1,008 தாமரைப் பூக்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பண்ருட்டி ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வ ரதராஜபெருமாள் கோவிலில் 12ம் ஆண்டு திருபவித்ரோற்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. மாலை 5:00 மணிக்கு பகவானிடம் அனுமதி பெறுதல், பவித்ர பூஜை , முதல்கால
ேஹாமம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 ம ணிக்கு நித்யபடி பூஜை , திருமஞ்சனம், பவித்ரங்கள் சாற்றுதல், மகாசாந்தி, 2ம் கால ேஹாமம், மாலை 4:00 மணிக்கு 3ம் கால
ேஹாமம், இரவு 8:00 மணிக்கு திருப்பா வாடை , தளிகைசமர்ப்பணம் நடந்தது. நேற்று காலை உற்சவர் திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயார் சேஷ வாகனத்தில் புஷ்ப பந்தலில் சிறப்பு அலங்காரத்தில் 1,008தாம ரைப் பூக்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை தாமரைப்பூ ச கஸ்ரநாம குழுவினர் மற்றும் தர்மகர்த்தா பாண்டுரங்கன் செய்திருந்தனர்.