புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு : குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2022 09:09
சபரிமலை, புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. தரிசனத்துக்கு அதிக பக்தர் கூட்டம் காணப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து ஆழியில் நெருப்பு வளர்க்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் 18–ம் படி வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 21–ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடைபெறும். 21–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நேற்று நடை திறந்த போது படியேற திரளான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.