பதிவு செய்த நாள்
17
செப்
2022
01:09
கரூர்: கரூர், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் வரும் 27ல் கொடியேற்றத்துடன், புரட்டாசி விழா தொடங்குகிறது. தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு வரும், 27ல் காலை 7:30 மணி முதல், 8:30 மணி வரை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து, நாள்தோறும் இரவு, 7:00 மணிக்கு சிறப்பு வாகனங்களில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. பிறகு, அக்டோபர், 3ல் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 4ல் குதிரை வாகனத்தில், சுவாமி திருவீதி உலா, 5ல் காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.