Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: புரட்டாசி ராசி பலன் மிதுனம் : புரட்டாசி மாத பலன் மிதுனம் : புரட்டாசி மாத பலன்
முதல் பக்கம் » தை மாத பலன் 15.1.2023 முதல் 12. 2.2023 வரை
ரிஷபம் : புரட்டாசி மாத பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : புரட்டாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

17 செப்
2022
15:44


கார்த்திகை - 2, 3, 4:
வாக்கு திறமையும் எளிதில் கோபம் அடையாத குணமும் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் நட்சத்திரநாதன் சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்னையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்னைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். எதிலும் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளை தலை துாக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பெருமை ஏற்படும். அரசியல் துறையினர் திறமையான  பேச்சால் வெற்றி காண்பர். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: அனுமனுக்கு தீபம் ஏற்ற எதிர்ப்பு அகலும்.
சந்திராஷ்டமம்: அக்.1
அதிர்ஷ்ட நாள்: செப். 25

ரோகிணி
எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடையாத உங்களுக்கு இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். உடல்  மனதில் உற்சாகத்தை தரும். அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்னைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாளர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்னைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு தொழில் சீராக நடக்கும். அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்னைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.
பரிகாரம்: காவல்தெய்வத்தை வழிபட்டு வர கடன் தீரும்.
சந்திராஷ்டமம்: அக். 2
அதிர்ஷ்ட நாள்: செப். 26

மிருகசீரிடம் - 1, 2:
சாந்தமும், அமைதியும் உடைய உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள். பணியாளர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளித்தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும். கலைத்துறையினருக்கு தடுமாற்றம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு பணவரவு திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்குவது நல்லது.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட புத்தி பலம் பெறும்.
சந்திராஷ்டமம்: அக். 3, 4
அதிர்ஷ்ட நாள்: செப். 26

 
மேலும் தை மாத பலன் 15.1.2023 முதல் 12. 2.2023 வரை »
temple news
அசுவினி: சிரமமான நேரங்களிலும் தெளிவாக முடிவெடுக்கும் உங்களுக்கு இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை - 2, 3, 4: மற்றவர்களிடம் நன்மதிப்பு கொண்ட உங்களுக்கு இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் - 3, 4: முழுமூச்சாக எதிலும் ஈடுபடும் உங்களுக்கு இந்த மாதம் எதிலும் நிதானமாக செயல்படுவது ... மேலும்
 
temple news
புனர்பூசம் - 4:தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் உங்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் ... மேலும்
 
temple news
மகம்: எளிதில் அனைவரையும் வசீகரிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எளிதில் மற்றவரை கவரும் வகையில் திறமையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar